தமிழாய்வுக்கு ஒரு நிமிடம் (1m4tr)
அறை எண் – MMSTVL33
Does Valluvam support oppression of the weaker sections of the Society ?
திருக்குறள் 861
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை
மெலியார்மேன் மேக பகை
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
மெலியார்மேல் மேக பகை
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக- தம்மினும் வலியார்க்குப் பகையாயெதிர்த்தலைத் தவிர்க; மெலியார்மேல் பகை ஓம்பா மேக- மற்ற மெலியார்க்குப் பகையாதலைத் தவிராது விரும்புக
கருத்தியல் விளக்க காணொளி
17.04.17 - https://www.facebook.com/selvam.kannappan -
எழுதியது,
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
(1) வலியார்க்கு மாறேற்ற லோம்புக - வலியோரை எதிர்த்துப் போரிட விரும்பு(2) ஓம்பா மெலியார்மேன் மேக பகை - மெலியோர் மேல் பகை ஓம்பாதே
வள்ளுவம் சரியாகத்தான் சொல்லுகிறது. உரையாசிரியர் உரைகளில் சொல்லாடலில் கொஞ்சம் மாறுபாடு இருந்திருக்கலாம்.
கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை எதுவும் தத்துவார்த்தமான விளக்கமாக இருக்குமோ என்ற ஐயம் தோன்றுகிறது.
இந்த இணையதளத்தில் சரியாக இருக்கிறது,
http://tamilvu.org/slet/l2100/l2106uri.jsp?song_no=861&book_id=31
17.04.17 -https://www.facebook.com/arthamullainiyamanam.drbalasubramanian
எழுதியது,
பகை நாடு என்று வரும் போது அது ராச தந்திரம் .. Stratagies for External affairs. .
வள்ளுவம் தமிழ் மறை அது ஒரு போதும் சாதீய வர்க்க பேதங்களை ஆதரிக்க இம்மியும்
வாய்ப்பு இல்லை அப்படி அவர்கள் எழுதியது அவர்களது ஆதிக்கப்பார்வைதான்

17.04.17 -https://www.facebook.com/Meeran2050 - எழுதியது,
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
மு.வரதராசனார் உரை:
தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
பரிமேலழகர் உரை:
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக - தம்மின் வலியார்க்குப் பகையாய் எதிர்தலை ஒழிக; மெலியார்மேல் பகை ஓம்பா மேக - ஏனை மெலியார்க்குப் பகையாதலை ஒழியாது விரும்புக. ('வலியார' என்புழித் துணை வலியும் அடங்கலின், 'மெலியார்' என்புழித் துணை வலியின்மையும் கொள்ளப்படும். அத்துணைதான் படை பொருள் முதலிய வேற்றுமைத் துணையும், நல்லறிவுடைமை நீதிநூல்வழி ஒழுகல் முதலிய ஒற்றுமைத் துணையும் என இரண்டாம். அவ்விரண்டும் இல்லாரை வெல்வார்க்கு வலி தொலையாமையின் அவரோடு பகைத்தல் விதிக்கப்பட்டது. சிங்கநோக்காகிய இதனுள் பகை மாட்சி பொதுவகையால் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
தம்மின் வலியார்க்குப் பகையா யெதிர்தலைத் தவிர்க: தம்மைப் போற்றாத எளியார்மாட்டுப் பகைகோடலை மேவுக. இது தனக்கு எளியாரோடு பகை கோடலாமென்றது.
Translation:
With stronger than thyself, turn from the strife away;
With weaker shun not, rather court the fray.
Explanation:
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.
கலைஞரைத்தவிர்த்து யாரும் சரியான கருத்தை பதிந்தமாதிரி தெரியவில்லை. அப்படியே சங்கத்தமிழை இன்றைத்தமிழுக்கு மொழிமாற்றம் செய்தது போல இருக்கிறது .